தமிழக மக்கள்

முன்னேற்றக் கழகம்

தீர்மானங்கள்

01.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளராக செயலாற்றி உடல்நலக்குறைவால் மறைந்த சிவ.இராஜேந்தின் அவர்களின் மறைவிற்கும் கட்சியின் நிர்வாகிகளின் உறவினர்களின் மறைவிற்கும் செயற்க்குழு கூட்டம் இரங்கல் தெரிவித்து அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
02.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு தேர்தல் மூலம் கிளை ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு ஜனநாயக முறைப்படி அனைவரிடமும் விருப்ப மனு பெற்று முறைப்படி அனைத்து மாவட்டங்களிலும் தேர்வ செய்யப்பட்டது. அதனடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட கிளை ஒன்றிய மாவட்ட புதிய நிர்வாகிகள் அனைவரையும் இச்செயற்குழு திறம்பட செயல்பட வழியுறுத்தி வாழ்த்துகிறது.
03.
கட்சியின் கடைகோடி தொண்டர்களின் விருப்பத்தின்படி கழகத்தின் ஒட்டு மொத்த நிர்வாகிகளின் முன்மொழிவை ஏற்று மாநில இளைஞர் அணி; தலைவராக மதிப்பிற்குரிய இளையவேந்தர் மருத்துவர் திரு.ஜா.வியங்கோ பாண்டியன் அவர்கள் ஏக மனதாக ஏற்று தேர்ந்தெடுக்கப்பட்டதை இச்செயற்குடு மனதார ஏற்று வாழ்த்துகிறது. மேலும் கழகத்தில் மாநில துணைப்பொதுச்செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள நெல்லை வழக்;கறிஞர்.திரு.சண்முக சுதாகர் எம்.ஏ. எல்.எல்.பி இராமநாதபுரம் வழங்கறிஞர் திரு.அமுதமுரளி தூத்துக்குடி திரு.அருண்பிரின்ஸ் சென்னை திரு.தமிழரசன் ஆகியோரை இச்செயற்குழு வாழ்த்துகிறது.
04.
தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு உரிய கவனம் செலுத்;தி பள்ளி செல்லும் குழந்தைகளை குழந்தைத் தொழிலாளர்கள் ஆக்கப் படுவதை தடுக்கவேண்டும். என்று வலியுறுத்தி இச்செயற்குழு தீர்மானம் நிறைவேற்றுகிறது.
05.
தமிழக்கத்தில் பருவமழைக்காலம் தொடங்கியுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் மழைநீர் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போதிய நிர்வரணங்களை தமிழக அரசு வழங்க இச்செயற்குழு கேட்டுகொள்கிறது. மேலும் மழை வெள்ளத்தால் பயிர் சேதடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவராணம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
06.
தமிழகத்தில் பருவமழைக்காலம் என்பதால் விவசாயிகள் விவசாயப்பணிகள் தொடங்கி வரும் வேலையில் விதை மற்றும் உரங்கள் பற்றாக்குறையாக உள்ளது. தமிழகஅரசு விவசாயிகளின் தேவையை உணர்ந்து துரித நடவடிக்கை எடுத்து அனைத்து விவாசயிகளுக்கு விதை மற்றும் உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க செய்யவேண்டுமென தமிழக அரசை இச்செயற்குடு கேட்டுக்கொள்கிறது.
07.
மின்கட்டண உயர்வு உடன் பால்விலை உயர்வு முட்டை விலை உயர்வு போன்ற விலைவாசி உயர்வு தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பெருமளவு பாதிக்கின்றது இச்செயற்குழு இதை கண்டிக்கிறது. தமிழக அரசு உடனே தமிழக அரசு கவனம் செலத்தி கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
08.
நவம்பர் 30 தலைவர் தமிழினவேந்தரின் பிறந்த நாள் முதல் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை தமிழக முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னெடுப்பதென்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.
  • 1. பட்டியல் வெளியேற்ற கையெழுத்து இயக்கம் (தேதி:30 நவம்பர் 2022)
  • 2. பட்டியல் வெளியேற்ற பரப்புரை கலைப்பயணம் (தேதி:30 நவம்பர் 2022)
  • 3.பட்டியல் வெளியேற்ற வலியுறுத்தி மாவட்ட வாரியாக கோரிக்கை மனு வழங்குதல்.
  • 4.கழகத்தின் சார்பாக பட்டியல் வெளியேற்றத்தை வலியுறுத்தி வரும் 2023 ஜுலை 2 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மாநில மாநாடு
  • 5.2023 அக்டோபர் 9 தேதி பட்டியல் வெளியேற்ற கோரிக்கை நடைபயணம் (கன்னியாகுமரி முதல் சென்னை வரை)
09.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடைசெய்ய சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
10.
தென்தமிழகத்தில் சமீபகாலமாக தொடரும் ஜாதியபடுகொலைகளை கடுமையாக இச்செயற்குழு கண்டிக்கிறது. தமிழக காவல்துறை ஜாதியப் படுகொலைகளை தடுக்க சிறப்புப் படை அமைத்திருப்பதாக தெரிவித்துள்ளதை இச்செயற்குழு வரவேற்கிறது. தமிழக அரசு இதன் மீது தனக் கவனம் செலுத்த வேண்டுமென்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
11.
வருகின்ற 2024 நாடளுமன்ற தேர்தலில் தென்காசி நாடளுமன்றத் தொகுதியில் கழகத்தின் தலைவர் திருமிகு.பெ.ஜான் பாண்டியன் எம்.ஏ. அவர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வது என ஏக மனதாக செயற்குழு வலியுறுத்துகிறது. அதற்காக கழகத்தின் நிர்வாகிகன் தொண்டர்கள் இன்றே களப் பணிகளை தொடங்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
12.
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிகட்டு தடையின்றி நடைபெறுவதற்கு தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
13.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பாளர்கள் மரக்கன்றுன்றுகள் பனைவிதைகளை பொது இடங்களில் நட்டு இயற்கை வளத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை நமதுக் கட்சியனர் முழு அர்பணிப்போடு செய்யவேண்டுமென்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

5டி பெட்டுக்கோலா டவர் எண். 190,
பூந்தமல்லி உயர் சாலை,
கீழ்ப்பாக்கம், சென்னை – 600010.

வணக்கம் 👋 உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.

We don’t spam!

Copyright © 2022 TMMK. All rights reserved