தமிழர் நலமும் தமிழர் வளமும் பாதுகாப்பது என்பது.... சாதிய பாகுபாடு தமிழ் மண்ணில் நீண்ட நெடும் காலமாக தமிழர் நலனை பாதிக்கும் ஒரு தலையாய பிரச்சனை அதற்கு நிரந்தர தீர்வு காண்பது அவசியம் அத்தகைய தீர்வு நோக்கி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் செயல்படும்
தமிழர்களின் மொழி மற்றும் கலாச்சார பண்பாடுஆகியவற்றை பாதுகாப்பது தமிழர் நலன் காப்பதில் ஒரு அங்கம். தமிழர் மொழி மற்றும் கலாச்சார பண்பாடு காக்கும் செயல்பாடுகளை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் செயல்படுத்தும்.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்தநாட்டில் பெண்கள் எவ்வளவு வளர்ச்சி அடைத்துள்ளார்கள் என்பதனை அளவுகோளாக வைத்து அளவிடப்படுகிறது. பொதுவெளியில் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவது மட்டுமே பெண்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். பெண்களின் பாதுகாப்பு உறுதிசெய்யும் செயல்பாடுகளை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் செயல்படுத்தும்
தமிழகத்தின் இயற்கை வளம் தொடர்ந்து சுரண்டைப்படுகிறது அதனை தடுத்து எதிர்கால தமிழ் தலைமுறைக்கும் அவர்களின் நலன் காக்க இயற்கை கொடையாக கொடுத்துள்ள நீர் நிலம் காற்று என அனைத்து வளங்களை பாதுகாத்து கொடுக்க வேண்டும் அதற்கான அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் செயல்படும்
புரட்சியாளர், டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் 66-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று தலைமையில் புரட்சியாளர், டாக்டர்.அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நவம்பர் 30 தலைவர் தமிழினவேந்தர் பிறந்த நாளில் நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி தலைவர் மருத்துவர் ஜா.வியங்கோ பாண்டியன் கொடியேற்றி உறுதிமொழி!
பட்டியல் வெளியேற்றத்தை தலைவர் தமிழினவேந்தர் அவர்கள் தலைமையில் விரைவில் வென்றெடுப்போம்.! தென்காசியில் தமமுக, பொதுச்செயலாளர் திருமதி.ஜா.பிரிசில்லா பாண்டியன் அவர்கள் சூளுரை.!